Sunday, December 17, 2017

கேள்விகள்

பொதுவெளியிலும், நண்பர்களிடமும் எதிக்கொள்ளும் கேள்விகள். ஓரளவுக்கு இதற்கான பதில் எனக்கு தெரிந்தாலும், எல்லா கேள்விகளையும் தொகுத்து ஒரே இடத்தில் சுருக்கமான தெளிவான விடைகளை பதிவு செய்து வைத்தால் பலனளிக்கும் என்பதால் இந்த முயற்சி.

மதம்

  1. இந்து மதத்தை மட்டும் ஏன் விமர்சனம் வைக்கிறீர்கள்? மற்ற மதங்களில் எந்த குற்றமும் இல்லையா?
  2. இந்து மதத்தில் சாதி இருப்பது போல் மற்ற மதங்களில் பிரிவினை இருக்கிறதே?
  3. ரம்சானுக்கு மட்டும் கலைஞர் வாழ்த்து சொல்கிறாரே?
  4. பிராமணர்கள் மட்டும் தான் கோவில் கருவறைக்குள் செல்லலாம் என்பது எங்கள் நம்பிக்கை. அதை கேள்வி கேட்க நீங்கள் யார்?
  5. ஒரு சாராரின் நம்பிக்கைகளை இழித்து பேசுவது சரியா?
  6. மற்ற மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் கலைஞர் ஏன் இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வதில்லை?

சாதி

  1. அந்த காலத்தில் சாதி இருந்தது. இப்போது சாதி எங்கே இருக்கிறது? இல்லாத பிரச்சனையை கொண்டு சமூக அமைதியை ஏன் கெடுக்கிறீர்கள்?
  2. பிராமணர்கள் எந்த வன்முறையிலும் இறங்கியதாக செய்திகளே இல்லை. ஆனால் அவர்களை மட்டும் ஏன் எதிர்க்கிறீர்கள்?
  3. மிகக்குறைந்த மக்கட்தொகை கொண்ட பிராமணர்களை ஏன் எதிர்க்கிறீர்கள்? அவர்களா சாதி வன்முறையில் ஈடுபடுகிறார்கள்?

இடஒதுக்கீடு

  1. இடஒதுக்கீடு இருப்பதால் தரம் குறையாதா?
  2. செல்வந்தர்களுக்கு சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு தருவது சரியானது தானா?
  3. இடஒதுக்கீட்டினால் பொருளாதாரத்தில் பின்தங்கிய மேல் சாதியினர் பாதிக்கப்படுகிறார்கள். எனவே பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீடு தான் சரியானது.
  4. இத்தனை ஆண்டு காலமாக இடஒதுக்கீடு கொடுத்தாயிற்று. இனியும் எத்தனை காலத்திற்குத் தான் கொடுக்க முடியும். எனவே இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும்.
  5. ஓட்டு வாங்கத் தானே இடஒதுக்கீடு பயன்படுகிறது. அதனால் என்ன நன்மை விளைந்தது?
  6. இடஒதுக்கீடு என்பதை பிரிவினையை ஏற்படுத்துகிறது. தகுதி இருப்போருக்கு முன்னுரிமை என்பது தானே சரியானது?
  7. சாதி ஒழிய வேண்டும் ஆனால் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடு மட்டும் வேண்டுமா?

மொழி

  1. தமிழ் படித்தால் வேலை கிடைக்குமா?
  2. வேற்று நாட்டு மொழியான ஆங்கிலத்தை முன்னிறுத்தி நமது தேசிய மொழியான இந்தியை எதிர்ப்பது ஏன்? தேசிய மொழியான இந்தியை எதிர்த்து, அந்நிய மொழியான ஆங்கிலத்தை ஏற்றுக் கொள்வது அடிமை மனநிலை இல்லையா?
  3. தேசிய மொழியான இந்தியை எதிர்ப்பது ஏன்? தேசத்தை ஏற்றுக் கொண்டு இங்கு வாழ்பவர்கள், தேசியமொழியை கற்க மறுப்பது ஏன்? பிடிக்காவிட்டால் வெளியேறி விட வேண்டியது தானே?
  4. மதத்தை உயர்த்தி பிடிப்பது மதவாதம் என்றால், ஒரு மொழியை உயர்த்தி பிடிப்பது மொழி வாதம் ஆகாதா?
  5. தலைவர்களின் குழந்தைகள் இந்தி மொழி படிக்கும் போது மற்றவர்களை எதிர்க்க சொல்வது ஏன்?

கடவுள் மறுப்பு

  1. உங்கள் வீட்டில் இருப்பவர்களே கடவுளை நம்பும் போது மற்றவர்களுக்கு அறிவுரை சொல்வது ஏன்?
  2. கடவுளை இல்லை என்போருக்கு கோவிலைப் பற்றியும், இந்துக்களைப் பற்றியும் ஏன் விமர்சனம் செய்கிறீர்கள்?
  3. நாத்தீகர்களின் விமர்சனத்தினால் இந்துக்களின் மனம் புண்படுகிறது!
  4. நாத்தீகர்கள் அறிவுஜீவிகள் என தம்மைத்தாமே நினைத்துக் கொண்டு எதற்கெடுத்தாலும் விதண்டாவாதம் செய்கிறார்களா?
  5. நம்பிக்கைகளை கேலி செய்யும் நீங்கள் அறிவியலில் எல்லாவற்றிற்கும் விடை இருப்பதாக கருதுவது சரிதானா?
  6. அறிவியலில் கோளாறுகளே இல்லையா? அறிவியல் சொல்வது எல்லாம் சரியா? அறிவியலால் தீமைகளே ஏற்படவில்லையா?
  7. இவ்வுலகத்தில் கடவுளை நம்புபவர்களே அதிகம். நாத்தீகம் தான் சரி என்றால் ஏன் பெரும்பாலனோர் அதை நம்பவில்லை?

அரசியல்

  1. படிக்காத அரசியல்வாதிகள் நாட்டையே கெடுத்து விட்டார்கள். எனவே மிகவும் நன்றாக படித்தவர்களுக்கு மட்டுமே அரசியல் அதிகாரத்தை கொடுக்க வேண்டும்.