Thursday, March 12, 2009

நான்... கடவுள்...

கடவுளுக்கு 100 தேங்காய் உடைத்தால் தன்னை பாசாக்கி விடுவார் என்று நினைக்கும் மாணவனுக்கு ஆன்மீகவாதிகள் தரும் ஆலோசனை என்ன வென்றால், ஆண்டவன் உங்களுக்காக தேர்வெழுத மாட்டார், நீங்கள் படிக்க வேண்டும், நீங்கள் தான் தேர்வு எழுத வேண்டும்.

இது எப்படி இருக்கு...

நானே தான் படிக்க வேண்டும், நானே தான் தேர்வையும் எழுத வேண்டும். !!!!

கடவுளை வேண்டுவதால் எனக்கு ஒரு தன்னம்பிக்கை ஏற்பட்டு நன்றாக படித்து தேருவேனாம்...

காரியம் நிறைவேற காரணம் நானாகவும் உந்து சக்தியாக கடவுளும் இருக்கும் போது இதில் யார் உன்னதமானவர் நானா? இல்லை கடவுளா?

காரியம் செய்பவனே உயர்ந்தவன் என்பது என் கருத்து... மேலும் கடவுளாக வந்து நானே உயர்ந்தவன் என்று போட்டோவுக்கு போஸ் கொடுத்ததேயில்லை என்பது கூடுதல் தகவல். :-))

பீடிக்கு நெருப்பு வேண்டும் !!!

வியட்நாமில் அமெரிக்கா ஏகாதிபத்தியத்தை எதிர்த்து தன்னையே எரித்துக் கொள்ளும் புத்த புக்குவும், அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து தங்கள் வேலைகளை பார்க்கும் பொது மக்களும், சிகரெட் பற்ற வைக்க நெருப்பு தேடும் காவலரும் ஒருங்கே!!!

Monday, March 09, 2009

கல்வி தரத்தை உயர்த்த யோசனை?

தேர்தல்மூலம் மக்களின் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்படும் (MLA, MP, Ward Councilor, etc.) எல்லோருடைய குழந்தைகளும், பேரக் குழுந்தைகளும், கொள்ளுப் பேர குழந்தைகளும் (உண்மைதான் அவ்வளவு வயதிலும் பிரதிநிதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள்) கண்டிப்பாக அரசாங்கம் நடத்தும் கல்வி நிறுவனங்களில் தான் கற்க வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும்.

அந்த சட்டத்தில் எந்த exception களும், விதிமுறை தளர்தலும், ஓட்டைகளும் இருக்ககூடாது.

இந்த சட்டத்தை மீறும் எவர் பற்றியும் ஆதாரத்தோடு தேர்தல் கமிசனுக்கு ஒரு கடிதம் போட்டால் உடனடியாக அவர்களின் பதவி பறிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு வரும் புகார்கள் 1 மாதத்திற்குள் முடிவெடுக்கப்பட வேண்டும்.

இந்த கோரிக்கையை எந்த கட்சி ஏற்றுக் கொள்கிறதோ அந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டும்.

இந்த கோரிக்கையை முதல் கட்டமாக எல்லா வாக்காளர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.

எப்படி இருக்கு என் யோசனை? பின்னூட்டத்தில் தெரிவியுங்களேன்!!!