Tuesday, September 30, 2008
Wednesday, July 16, 2008
பெரிய தம்பி
உங்களுக்கு பெரிய தம்பியை தெரியுமா? தன்னுடைய அம்மாவைக் கண்டால் பெரிய தம்பிக்கு பிடிப்பதேயில்லை. ஏனென்றால் பக்கத்து தெருவில் உள்ள அப்பார்ட்மெண்டில் கடைசி மாடியில் ஒரு அம்மா இருக்கிறார். அவர் நல்ல சிவப்பு நிறம். பார்க்க மிகவும் அழகாக வேறு இருப்பார். நல்ல வசதியானவரும் கூட. அவரை பார்த்தாலே பெரிய தம்பிக்கு மனதிற்கு மிகவும் தெம்பாக இருக்கும். அவர் மீது பாசத்தைப் பொழிவார். மின்சார கட்டணம் செலுத்துவது, பால், காய்கறி வாங்கி தருவது என எல்லா சில்லறை வேலைகளையும் செய்வார்.
அவருடன் உள்ள பழக்கத்தினால் பல பெரிய மனிதர்கள் அறிமுகமானார்கள். நல்ல பழக்க வழக்கங்கள் அதிகரித்தது. கைநிறைய ஊதியம் கிடைக்கக்கூடிய பணியும் அமைந்தது. ஒரே வரியில் சொல்வதானால் அவர் எங்கேயோ போய் விட்டார்.
ஆனால் அவரை பெற்று ஆளாக்கிய சொந்த அம்மாவின் நிலை? சொல்லி தெரிய வேண்டுமா அந்த அவலத்தை? மற்றவர்கள் திட்டுவதை விட சொந்த அம்மாவை அவர் திட்டுவதுதான் அதிகம். சொந்த அம்மாவை மதித்து அவரை நல்ல முறையில் கவனித்திருந்தால் இப்படிப்பட்ட மரியாதை, வேலை, பெரிய மனிதர்களின் பழக்க வழக்கம், அந்தஸ்து என எல்லாம் கிடைத்திருக்குமா?
இன்றைய நிலையில் சிவப்பு அம்மா தான் ஆங்கிலம். கறுப்பு அம்மா - தமிழ். பக்கத்து வீட்டு அம்மா மட்டுமல்ல எல்லா உயிரினங்களையும் நேசியுங்கள். அதே போல சொந்த அம்மாவையும் நேசியுங்கள்.
எல்லா மொழிகளையும் கற்று தேருங்கள். அதோடு அவரவர் சொந்த மொழியையும் கூட.
பக்கத்து வீட்டு அம்மாவை புகழ்ந்து சொந்த அம்மாவை அவமானப்படுத்தும் கேவலத்தை இனியாவது நிறுத்துங்கள்.
உங்கள் இல்லத்தின் வாசல் தமிழாக இருக்கட்டும். காற்று வர எத்தனை பிற மொழி சாளரங்களை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்.

Wednesday, January 09, 2008
விண்ணப்ப பெறும் வரிசையை தகர்க்க யோசனை
preKGக்கு குழந்தையை சேர்க்க விண்ணப்பம் வாங்கிய கதையை நீங்கள் எல்லா பெற்றோர்களிடமும் சுவாரசியமாக கேட்ட முடியும். முந்திய நாள் இரவே சென்றவர்கள், அலாரம் வைத்து எழுந்து சென்றவர்கள், வரிசையின் குறுக்கே சென்றவர்கள் என பலதரப்பட்டவர்களையும் கேள்விப்படலாம்.
மார்ச் மாதத்தில் பள்ளிக்கு முன்னால் கூட்டமாக பெற்றோர்கள் நின்றால் தான் அந்த பள்ளிக்கே பெருமை என எல்லா தாளாளர்களும் நினைப்பதால் தான் நமக்கு இந்த நிலைமை.
வழக்கம் போல் கிருத்துவ கல்வி நிறுவனங்கள் இந்த பழக்கத்திற்கு நல்லதொரு தீர்வினை கண்டிருக்கிறார்கள். பள்ளியின் வாசலிலேயே அழகாக தகவல் எழுதி வைத்திருக்கிறார்கள். 5 ரூபாய்க்கு அஞ்சல்தலை ஓட்டிய சுயமுகவரியிட்ட கவரும், குழந்தையின் பிறப்பு சான்றிதழும் இணைத்து பள்ளி முகவரிக்கு அஞ்சல் செய்ய வேண்டியது அவ்வளவே. நம் வீட்டை தேடி வரும் விண்ணப்பம்.
மற்ற பள்ளி நிர்வாகத்தினரும் கொஞ்சம் கவனித்தால் நல்லது.

அப்துல்கலாமும் முடிவுக்கு வந்த ஏவுகணை திட்டமும்
Integrated guided missile programme (IDGMP) scrapped. In future, weapon systems will be produced in collaboration with the foreign partners and at a faster pace. (The New Indian Express, Coimbatore edition Jan 9, 2008 page 11)
12 ஆண்டுகளில் முடிக்க வேண்டிய பணிகளை 20 ஆண்டுகளுக்கு பின்னும் தொடர்வதாலும், தற்போதைய காலகட்டத்தையும் கருத்தில் கொண்டு இதை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த IDGMP திரு.அப்துல்கலாம் அவர்களால் வழிநடத்தப்பட்டது.

பட்ஜெட், தொழிலதிபர்கள் மற்றும் நிதிஅமைச்சர்
Finance Minister P.Chidambaram in a pre-budget meeting with industrialists at his office in New Delhi on Tuesday-PTI (The New Indian Express, Coimbatore Edition Page 15, dated Jan 9, 2008)
கவனிக்க: சிவப்பு வண்ணமும், பெரிய எழுத்தும். :-)))))

Sunday, January 06, 2008
ரமண மகரிசியும் பெரியாரும்
The Hindu Sunday, January 6, 2008 (City Edition, Coimbatore, Tamilnadu)
OM NAMO BHAGAVATE SRI RAMANAYA
PUJYA SRI SWAMI RAMANANANDA
(26.5.1914 - 26.12.2007)
Sri Swami Ramanananda, nephew of Bhagavan Sri Ramana Maharishi and son of Sri Niranjanananda Swami was Absorbed in Sri Ramana at 8.35 p.m. on Wednesday the 26th December 2007 at Sri Ramanaramam, Tiruvannamalai. The end was sudden and peaceful.
ARADHANA for he Brahmaleena Swamiji will be held at Sri Ramanasramam at 7.30 a.m. on Tuesday, the 8th January 2008.
Swami Ramanananda, who was known as T.N.Venkataraman, before he took sanyasa in 1994, was President, Sri Ramanasramam for 41 years from 1953.
President
Sri Ramanasramam
சிவப்பு வண்ணமும், தடிப்பான எழுத்தும் என்னுடையது.

Wednesday, January 02, 2008
பயர் சர்வீசை கூப்பிட்டு ரீசார்ஜ் பண்ணுங்க
உங்க வீட்டுக்கு பயர் சர்வீசைக் கூப்பிட்டா உடனே வரமாட்டாங்க. ஏன்னு கேக்கறீங்களா? அவங்க தான் செல்போனுக்கு ரீசார்ஜ் பண்ணிட்டு இருப்பாங்களே!!!
நெறய சனம் *101 க்கு பதிலா 101 போட்டு அவங்க கழுத்தை அறுத்திட்டு இருக்காங்க. அவங்களுக்கு புரிய வச்சு உங்க போனை எடுக்கறதுக்குள்ள நாமெல்லாம் செத்து சுண்ணாம்பாக வேண்டியது தான்.
கவனிப்பீங்களா மக்களே!!!!????!!!

Subscribe to:
Posts (Atom)