preKGக்கு குழந்தையை சேர்க்க விண்ணப்பம் வாங்கிய கதையை நீங்கள் எல்லா பெற்றோர்களிடமும் சுவாரசியமாக கேட்ட முடியும். முந்திய நாள் இரவே சென்றவர்கள், அலாரம் வைத்து எழுந்து சென்றவர்கள், வரிசையின் குறுக்கே சென்றவர்கள் என பலதரப்பட்டவர்களையும் கேள்விப்படலாம்.
மார்ச் மாதத்தில் பள்ளிக்கு முன்னால் கூட்டமாக பெற்றோர்கள் நின்றால் தான் அந்த பள்ளிக்கே பெருமை என எல்லா தாளாளர்களும் நினைப்பதால் தான் நமக்கு இந்த நிலைமை.
வழக்கம் போல் கிருத்துவ கல்வி நிறுவனங்கள் இந்த பழக்கத்திற்கு நல்லதொரு தீர்வினை கண்டிருக்கிறார்கள். பள்ளியின் வாசலிலேயே அழகாக தகவல் எழுதி வைத்திருக்கிறார்கள். 5 ரூபாய்க்கு அஞ்சல்தலை ஓட்டிய சுயமுகவரியிட்ட கவரும், குழந்தையின் பிறப்பு சான்றிதழும் இணைத்து பள்ளி முகவரிக்கு அஞ்சல் செய்ய வேண்டியது அவ்வளவே. நம் வீட்டை தேடி வரும் விண்ணப்பம்.
மற்ற பள்ளி நிர்வாகத்தினரும் கொஞ்சம் கவனித்தால் நல்லது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment