Saturday, January 24, 2009

காலக் கொடுமை

  • அதிமுக ஆட்சியை பிடித்தது
  • செல்வகணபதி உள்ளாட்சி அமைச்சர்
  • கலர் டிவி ஊழல்
  • அதிமுக தேர்தலில் தோல்வி; திமுக வெற்றி
  • செல்வகணபதி திமுகவில் இணைந்தார்
  • கலர் டிவி ஊழலில் செல்வகணபதி விடுவிக்கப்பட்டார்

செய்தி தாளில் படித்த தலைப்புகளை கால வரிசைப்படி கொடுக்கப்பட்டுள்ளன. அதை வைத்து எடுக்கப்படும் முடிவுகளுக்கு நான் பொறுப்பல்ல.

Sunday, January 11, 2009

தமிழ் சொற்கள்

சில ஆங்கில வார்த்தைகளுக்கான தமிழ் சொற்கள்
  1. Wind Mill - காற்றாலை
  2. Chief Minister - முதலமைச்சர்
  3. Inspector - ஆய்வாளர்
  4. Conductor - நடத்துனர்
  5. Bus Stop - பேருந்து நிறுத்தம்
  6. Browser - உலாவி
  7. Website - இணையதளம்
  8. eMail - மின்னஞ்சல்
  9. Wire - கம்பி
  10. Ambassador - தூதுவர்
  11. Management - மேலாண்மை
  12. Snacks - நொறுக்குத்தீனி
  13. Personality - தோற்றப்பொலிவு
  14. Ego - அகந்தை
  15. Cell Phone - அலைபேசி
  16. Internet - இணையம்
  17. Dictionary - அகராதி
  18. Photo - புகைப்படம்
  19. Xerox - நகல்
  20. Kids - மழழையர்

கடவுள் என்றால்?

இறைவன் உலகத்தை படைத்தான் என்றால்
இடையினில் எல்லைகள் எதற்காக?

கடவுள் நம்மை காப்பான் என்றால்
காவல் ராணுவம் எதற்காக?

தூணிலும் துரும்பிலும் இருப்பான் என்றால்
துப்பாக்கி ரவையிலும் இருப்பானா?

அனைத்தும் அறிந்தவன் ஆண்டவன் என்றால்
நாங்கள் அல்லல்படுவதை அறிவானா?

சகலமும் படைத்தது அவன்தான் என்றால்
சாதியும் மதமும் படைப்பானா? அதில் சண்டைகள் வருவதை பொறுப்பானா?

பலபல நோவும் பட்டினி சாவும் பரமன் அவனின் செயல்தானா?
இந்த கொடுமையை அவனும் செய்வானா?

தமிழ் பொது அறிவு (!!???)

1) தமிழ் எந்தந்த நாடுகளில் ஆட்சி மொழியாக உள்ளது?
2) மெய்யெழுத்துகளை வரிசை கிரமமாக எழுதுக
3) தமிழ்தாய் பாடலை எழுதியவர் யார்?
4) ஜல்லிக்கட்டு நடக்கும் 4 ஊர்களின் பெயர்களை எழுதுக.
5) இராமயணத்தில் இலங்கைக்கு பாலம் அமைக்க உதவிய இனம் எது?
6) யாரை கேட்டு "ஜனகனமன"-வை தேசிய கீதமாக வைத்தனர்?
7) இலங்கையில் தமிழர்கள் குடியேறியவர்களா? பழங்குடிகளா?
8) திருகுறளில் எத்தனை பாடல்கள் உள்ளன? எந்த பாலில் அதிகமான பாடல்கள் இடம் பெற்றுள்ளன?
9) தமிழ் மாதங்களின் பெயர்களை எழுதுக.
10) தமிழ் எழுத்து சீர்திருத்தத்தை கொண்டு வந்தவர் யார்?

தமிழில் கலந்த பிறமொழி வார்த்தைகள்

  1. யுத்தம் - போர்
  2. சுதந்திரம் - விடுதலை
  3. தினம் - நாள்
  4. சந்தோசம் - மகிழ்ச்சி
  5. சாதம் - சோறு
  6. ரசம் - சாறு
  7. சம்பவம் - நிகழ்ச்சி
  8. சம்பந்தம் - தொடர்பு
  9. பிரபலம் - புகழ்
  10. பிரத்தியேகம் - சிறப்பு
  11. முக்கியம் - முதன்மை
  12. சப்தம் - ஓசை
  13. தயார் - ஆயத்தம்
  14. சுகம் - இன்பம்
  15. வியாபாரம் - வாணிகம்
  16. ராத்திரி - இரவு
  17. மாமூல் - வழக்கம்
  18. நிஜம் - உண்மை
  19. யோசி - சிந்தி
  20. புத்தி - அறிவு
  21. புத்தகம் - நூல்
  22. மைதானம் - திடல்
  23. சுத்தம் - தூய்மை
  24. அனுமதி - உத்திரவு
  25. ஜாமீன் - பிணை
  26. சுலபம் - எளிமை
  27. சேவை - தொண்டு
  28. சர்ச்சை - விவாதம்
  29. சாவி - திறவுகோல்
  30. நகர் - பட்டினம்
  31. கோவில் - ஆலயம்
உங்களுக்கு தெரிந்ததையும் சொல்லுங்களேன்!!!