Sunday, January 11, 2009

கடவுள் என்றால்?

இறைவன் உலகத்தை படைத்தான் என்றால்
இடையினில் எல்லைகள் எதற்காக?

கடவுள் நம்மை காப்பான் என்றால்
காவல் ராணுவம் எதற்காக?

தூணிலும் துரும்பிலும் இருப்பான் என்றால்
துப்பாக்கி ரவையிலும் இருப்பானா?

அனைத்தும் அறிந்தவன் ஆண்டவன் என்றால்
நாங்கள் அல்லல்படுவதை அறிவானா?

சகலமும் படைத்தது அவன்தான் என்றால்
சாதியும் மதமும் படைப்பானா? அதில் சண்டைகள் வருவதை பொறுப்பானா?

பலபல நோவும் பட்டினி சாவும் பரமன் அவனின் செயல்தானா?
இந்த கொடுமையை அவனும் செய்வானா?

1 comment:

Unknown said...

intha paadalai iyatriyavar yaar?